மேலிருக்கும், ஹென்றி மில்லரின் அறிவுரையை நண்பருடன் பகிர்ந்து கொண்டேன்.
நண்பர் : சூப்பர் சார். பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி வெச்சுக்கணும். ரொம்ப நன்றி. நண்பர்: ஆனா அஞ்சாவது பாயிண்டும் எட்டாவது பாயிண்டும் ஒரே சமயத்தில் ஒர்க் அவுட் ஆகுமா?நான்: தெரியலியே சார்! இல்லாட்டி சும்மா எழுதிட்டு.. அப்புறம் மானே தேனே சேர்த்துக்கலாம்னு சொல்றார் போலநண்பர்: அஞ்சாவது பாயிண்ட் : படைப்பூக்கம் இல்லாதபோது அதை ஒரு வேலையாச் செய்.எட்டாவது பாயிண்ட்: வண்டி மாடு கணக்கா வேலை செய்யாதே. உன் சந்தோஷத்துக்கு மட்டுமே வேலை செய்.இது எப்படி?நான்: ஒருவேளை எந்த காரணத்தைக் கொண்டும் எழுதுவதை நிறுத்தாதேன்னு சொல்றதுக்காக அஞ்சாவத சொல்றாரோ?நண்பர்: அப்படியாதான் இருக்கும். இல்லாட்டி லாஜிக் இடிக்குமே?நான்: இப்போ ஒன்பது இடிக்குமோ? ஒன்பது: முடியலையா விட்டுடு. ஆனா அடுத்த நாள் கண்டிப்பா தொடர்ந்து செய்நண்பர்: என்ன இது, இவரோட அட்வைசுக்கே கோனார் நோட்ஸ் எழுதணும் போலயே!நண்பர்: அத்தோட நாலாவது பாயிண்ட்டை சேத்துப் படிங்க :)
நான் : சார்! தனித்தனியா படிச்சிட்டு ஃபாலோ பண்ணுவோம்! இப்படி யோசிச்சா முதலுக்கே மோசம்