Sunday, August 11, 2013

லூசுத்தனமான வாழ்க்கை #7

இந்த வாரம் ஒரு நாள் காலை, ட்விட்டரில் நமது @subatomic இந்த டெட் பேச்சைப் பற்றிச் சொல்லியிருந்தார். அருமையான பேச்சு.

TED.com பக்கமெல்லாம் போய்ப் பல காலம் ஆகிவிட்டது. இப்போது சில அம்சங்கள் வந்திருக்கிறது. ஒவ்வொரு பேச்சும், எழுத்தாக (Show Transcript) ஆகக் கிடைக்கிறது. ஒளித்துண்டுகளைப் பார்த்து/கேட்டு, அவர்கள் சொல்லவருவதைப் புரிந்து கொள்வது எனக்கு சற்று கடினம். இரண்டு மூன்று முறை கேட்டால் கூட அப்படித்தான். ஆனால், இப்போது எழுத்தாக கிடைப்பதால், அதைக் பதிவு செய்து கொண்டு வாசித்து புரிந்து கொள்வது எளிதாக இருக்கிறது.

Alain de Botton, A kinder, gentler philosophy of success என்ற தலைப்பில் பேசியிருக்கிறார். அவரது அருமையான பேச்சிலிருந்து சில வாக்கியங்களைக் கொண்டு ஒரு பதிவைத் தேற்றியிருக்கிறேன்.
For me they normally happen, these career crises, often, actually, on a Sunday evening, just as the sun is starting to set, and the gap between my hopes for myself, and the reality of my life.
இப்படித்தான் ஆரம்பிக்கிறார். ஆரம்பத்திலேயே மிக நெருங்கி வந்துவிடுகிறார். சில வருடங்களாக – வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்து – ஒவ்வொரு ஞாயிறு மதியமும் எனக்கு இப்படித்தான் இருக்கிறது. நன்றாக சாப்பிட்டுவிட்டு படுத்தால், ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே தூக்கம் வந்துவிடும். ஆனால், தூங்க சில நிமிடங்களில் – 30 நிமிடங்களுக்குள் முழிப்பு வந்துவிடும். திடீரென்ற விழிப்பு. பெரும்பாலும் படியிலிருந்து தடுக்கி விழும் போது, சமநிலை குலைந்து தடுமாறி கையையும் காலையும் கண்டபடி அசைப்போமே அது மாதிரியான திடீர் விழிப்பு. ஞாயிறு இரவுகள் இன்னமும் கொடுமை. ஒரு மணி வரை தூக்கம் வராது. தூக்கம் வராத தினங்களில், தூக்கம் வரவில்லை என்ற வருத்தமெல்லாம் இருக்காது, நாளைக்கு ஆபிஸில் போய்த் தூக்கம் வந்தால்? என்ற கவலை தான் இருக்கும். அப்பாவிடம் இதுபற்றி ஒரு முறை கேட்டேன் “ஞாயித்துக் கிழமை ராத்திரி தூங்கியதே இல்லை’ என்றார்.
It's perhaps easier now than ever before to make a good living. It's perhaps harder than ever before to stay calm, to be free of career anxiety.
ஆனால், நான் ஒரு 30தலிருந்து ஐம்பது வருடங்களுக்கு முன் பிறந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களைச் சுற்றி காலியிடங்கள் இருந்த போதும் அவற்றை வாங்கக் காசு இருந்திருக்காது; நீங்கள் இன்னும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. தொலைப்பேசி இருந்திருக்காது; மாதமொருமுறை கடிதம் வரும் வரை, உறவுகள் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடே இருந்திருப்பார்கள். ஒரு நாளைக்கு பத்து முறை ஃபோன் செய்து படுத்தியெடுக்கமாட்டார்கள். பெரிய தொந்திகொண்டோரெல்லாம், எழுபத்தைந்து வயதிற்கு மேலும் இருந்திருப்பார்கள்; இன்று போல் முப்பதில் ஹார்ட் அட்டாக் வந்து அடுத்தவருக்கும் மரண பயத்தைக் கொடுத்திருக்கமாட்டார்கள்.
The dominant kind of snobbery that exists nowadays is job snobbery. You encounter it within minutes at a party, when you get asked that famous iconic question of the early 21st century, "What do you do?"
 ‘என்ன பண்ற?’ இந்தக் கேள்வி ரொம்பவே கடினமானது. என் பதிலைக் கொண்டு, பாதிபேர் இந்த வேலையைச் செய்ய இவன் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், மீதி பேர் வெட்டி ஆபிஸர் என்று நினைக்கிறார்கள். இரண்டுமே தவறு. உண்மையில், என்ன செய்வதென்று நான் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தக் கேள்விக்கு இப்பிறப்பில் என்னால் பதில் சொல்ல முடியாமலே கூடப் போகலாம்.


I think we live in a society which has simply pegged certain emotional rewards to the acquisition of material goods. It's not the material goods we want. It's the rewards we want. And that's a new way of looking at luxury goods. The next time you see somebody driving a Ferrari don't think, "This is somebody who is greedy." Think, "This is somebody who is incredibly vulnerable and in need of love." In other words -- (Laughter) feel sympathy, rather than contempt.

Never before have expectations been so high about what human beings can achieve with their lifespan.

There is one really big problem with this, and that problem is envy. Envy, it's a real taboo to mention envy, but if there is one dominant emotion in modern society, that is envy.

The closer two people are, in age, in background, in the process of identification, the more there is a danger of envy -- which is incidentally why none of you should ever go to a school reunion -- because there is no stronger reference point than people one was at school with. But the problem, generally, of modern society, is that it turns the whole world into a school. Everybody is wearing jeans, everybody is the same.
அவர் ஸ்கூல் ரீயுனியனுக்கெல்லாம் போகாதே என்கிறார். நான் ஃபேஸ்புக்குக்கே போக வேண்டாம் என்று நினைக்கிறேன். (@subatomicக்கும் இதையே சொல்லியிருக்கிறார்). ஃபேஸ்புக்கில் வராத விஷயங்களே கிடையாது, புது வண்டி, புது மனைவி, புது குழந்தை, புது டையப்பர், சகலத்திற்கும் அங்கு இடமுண்டு. பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்தராத்மா நம்மைத் “உருப்படாதவனே!” என்று திட்டும். இதைப் பொறாமை என்று சொல்ல முடியாது.
When you go to a large bookshop and look at the self-help sections, as I sometimes do, if you analyze self-help books that are produced in the world today, there are basically two kinds. The first kind tells you, "You can do it! You can make it! Anything is possible!" And the other kind tells you how to cope with what we politely call "low self-esteem," or impolitely call "feeling very bad about yourself."
சுய உதவிப் புத்தகங்கள், அருமையானவை; அவை ஒரு உற்சாகத்தைத் தரவல்லவை – அது போலியானதாக இருந்தாலும் கூட. ஆனால், இத்தனைப் புத்தகங்கள் தேவையில்லை. தொடர்ந்து ஒவ்வொரு புத்தகமாகப் படித்துக் கொண்டே இருக்க வேண்டியதில்லை. ஒரு புத்தகம் போதும். எனக்கு ஜேம்ஸ் ஆலனின் “As a Man Thinketh” போதும்.
That's exhilarating if you're doing well, and very crushing if you're not. It leads, in the worst cases, in the analysis of a sociologist like Emil Durkheim, it leads to increased rates of suicide. There are more suicides in developed individualistic countries than in any other part of the world. And some of the reason for that is that people take what happens to them extremely personally. They own their success. But they also own their failure.
இவர் சொல்வதில் சந்தேகமிருந்தால், பெங்களூரிலிருந்து வெளிவரும் எந்த நாளிதழின் க்ரைம் பக்கத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
What we fear is the judgment and ridicule of others. And it exists.

You know, the number one organ of ridicule nowadays, is the newspaper. And if you open the newspaper any day of the week, it's full of people who've messed up their lives. They've slept with the wrong person. They've taken the wrong substance. They've passed the wrong piece of legislation. Whatever it is. And then are fit for ridicule.
இதற்காகவே இந்தச் செய்திகளைப் பார்ப்பதையும் படிப்பதையும் நிறுத்திவிட வேண்டும்.
The other thing about modern society and why it causes this anxiety is that we have nothing at its center that is non-human. We are the first society to be living in a world where we don't worship anything other than ourselves. We think very highly of ourselves, and so we should. We've put people on the moon. We've done all sorts of extraordinary things. And so we tend to worship ourselves. தூள்!
What I think I've been talking about really is success and failure. And one of the interesting things about success is that we think we know what it means. If I said to you that there is somebody behind the screen who is very very successful, certain ideas would immediately come to mind. You would think that person might have made a lot of money, achieved renown in some field. My own theory of success -- and I'm somebody who is very interested in success. I really want to be successful. I'm always thinking, "How could I be more successful?" But as I get older, I'm also very nuanced about what that word "success" might mean .
உண்மையில் வெற்றி என்றால் எதைச் சொல்வது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. ஒரு சமயம், எனக்கு எல்லாவற்றையும் அடைய வேண்டுமென்று தோன்றுகிறது. என்னைத் தவிர, அனைவரும் அவர்களுடைய இலக்கை அடைந்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது. இவரைப் போல் இருக்க வேண்டுமென்று தோன்றும் போது இவரைப் போலவும் ஆக வேண்டுமென்றும் தோன்றுகிறது.
Here's an insight that I've had about success. You can't be successful at everything. We hear a lot of talk about work-life balance. Nonsense. You can't have it all. You can't. So any vision of success has to admit what it's losing out on, where the element of loss is. I think any wise life will accept, as I say, that there is going to be an element where we are not succeeding.
ஐ லவ் திஸ் மேன். இருந்தாலும், இன்னும் பல விஷயங்களில் மூக்கை நுழைத்து மூச்சு முட்டிக் கொண்டு அவதிப்படவே விரும்புகிறேன். எதையும் விட்டுவிட இப்போதைக்கு விருப்பமில்லை. ஆனால், வேலையையும் வாழ்க்கையும் தனியாக பிரித்துப் பார்க்க வேண்டுமா? என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான். இரண்டு இடங்களிலும் மற்றவர்களுக்கு விருப்பமானவனாகவே இருக்க விரும்புகிறேன். ஆனால், இதுவரை அது நடக்கவில்லை. விதிவசத்தால் எனக்கு நெருக்கமாக இருப்பவர்கள், என்னைப் போல் ஒருவனை வெறுக்கத்தான் செய்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் கூட, நான் யாருடன் அதிகம் பேசினேனோ அவர்கள் என்னை விட்டு விலகிவிடுவார்கள்.
Thing about a successful life is, a lot of the time, our ideas of what it would mean to live successfully are not our own. They are sucked in from other people: chiefly, if you're a man, your father, and if you're a woman, your mother. Psychoanalysis has been drumming home this message for about 80 years. No one is quite listening hard enough, but I very much believe that that's true.
யாராவது எதையாவது செய்து கவனிக்கப்படும் போது, நான் அவராக இருக்க வேண்டுமென்றும், அவர் செய்வதைச் செய்ய வேண்டுமென்றும் தோன்றுகிறது. என்னைத் தூண்டுவது எனக்குள்ளிருக்கும் ஒன்றல்ல, அது எனக்கு வெளியே இருக்கிறது. சில சமயம், நான் இன்னும் சிறுவனாக இருக்கிறேனோ என்று தோன்றுகிறது.
And we also suck in messages from everything from the television, to advertising, to marketing, etc. These are hugely powerful forces that define what we want and how we view ourselves. When we're told that banking is a very respectable profession a lot of us want to go into banking. When banking is no longer so respectable, we lose interest in banking. We are highly open to suggestion .
விற்பனையியலின் முதற்ப்படி, மனிதர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதே. பின்னர் அவர்கள் இழந்த நம்பிக்கையைக் கொண்டு பணம் பண்ண வேண்டும். நம்மில் பலரும் அதை நம்புகிறோம். அழகான அக்குளைப் பெற்றுவிட்டால், நாம் உலகத்தை மாற்றிவிட முடியுமாம்! குறைந்தபட்சம் நமது வாழ்க்கையைக் கூட மாற்றாது.
So what I want to argue for is not that we should give up on our ideas of success, but we should make sure that they are our own. We should focus in on our ideas. and make sure that we own them, that we are truly the authors of our own ambitions. Because it's bad enough, not getting what you want, but it's even worse to have an idea of what it is you want and find out at the end of a journey, that it isn't, in fact, what you wanted all along.
நான் இதுவரை எடுத்த முக்கிய முடிவுகளில் சில (பெரும்பாலானவை என்றும் சொல்லலாம்) எல்லாம் என்னுடைய ஆசைகளுக்கு எதிரானவையாகத் தான் இருந்திருக்கின்றன. மற்றவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தினார்கள் என்று நான் சொல்லமாட்டேன். அவை நான் எடுத்த முடிவுகள். என்னுடைய விருப்பங்களின் மீது என்னுடைய நம்பிக்கைக் குறைவால், அவற்றுக்கு எதிராக நான் எடுத்த முடிவுகள். பின்னர் அவற்றை நான் ஏற்றுக் கொண்டு, சுகமாக இருப்பது வேறு விஷயம்.