என்னைச் சுற்றி எப்படி திடீரென்று இத்தனை மனிதர்கள்? திடீரென்று இல்லை
காலங்காலமாக, கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் பெருகி வந்திருக்கிறார்கள். இன்னும்
பெருகி வரப்போகிறார்கள். என்னை ஒரு மூலையில் போட்டு அடைக்க
வேண்டியிருக்கிறது. தூங்குவதற்கும் விழிப்பதற்கும் நாற்காலியை
நகர்த்துவதற்கும் அலாரம் வைப்பதற்கும் எல்லாருடைய சவுகரியத்தையும் பார்க்க
வேண்டியிருக்கிறது. நானென்பது இரண்டாம்பட்சமாகி, நானெனும் பொய்யை முன்னால்
நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மெய்யுலகில் போதாதென்று, மெய்நிகர் உலகில்
மொய்க்கும் கூட்டம். பொறாமையும் இயலாமையும் கூடவே மறந்தேபோய்விட்ட பழைய
கனவுகளும் அதன் தோல்விகளும்; கருணை, காருண்யம் இத்யாதிகளுக்கெல்லாம் எங்கே
இடம்? கடித்துக் குதறுவதே நியாயமகாப்படுகிறது. உள்ளிருக்கும் மிருகம்
வெளிப்பட்டு நிற்கையில், உலகமே அழுகிறது.
லட்சியவாதிகள் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். குறைந்தபட்ச லட்சியம் கூட இல்லாத மிருகம், இப்படி ஏதாவது காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும்.
லட்சியவாதிகள் ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள். குறைந்தபட்ச லட்சியம் கூட இல்லாத மிருகம், இப்படி ஏதாவது காரணம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும்.